இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம். ஆட்டநாயகன் கைல் ஜேமிசன் ஓபன்டாக் – விவரம் இதோ

Jamieson
- Advertisement -

ஐசிசி நடத்திய முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியதன் மூலமாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஒரு போட்டியில் வெற்றி பெற்று கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது நியூசிலாந்து அணி. அந்த அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணியானது, இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதனையடுத்து 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த கைல் ஜேமிசன் ஆட்ட நயாகான தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Jamieson 1

போட்டி முடிந்ததும் பேட்டிளித்திருக்கும் கைல் ஜேமிசன், இது போன்ற மிகப் பெரிய தொடரின் இறுதிப் போட்டியில், அதுவும் இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டை எண்ணி நான் மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணியில் மூத்த வேகப் பந்து வீச்சாளர்களான டிம் சுவுத்தி, நீல் வாக்னர. மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இருந்த நிலையிலும் இளம் வீரரான கைல் ஜேமிசனின் மேல் நம்பிக்கை வைத்து தொடக்க ஓவர்களை வீச வாய்ப்பளித்தார் அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன்.

- Advertisement -

அவரும் அதற்கேற்றார்போல் சிறப்பாக பந்து வீசி, இந்திய அணியின் மிக முக்கிய பேட்ஸ்மேனான, கேப்டன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை இரண்டு இன்னிங்சிலும் கைப்பற்றினார். விராட் கோஹ்லியின் விக்கெட்தான் இரண்டு இன்னிங்சிலும் ஆட்டத்திற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இண்ணிங்சில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

Jamieson 2

நீல் வாக்னர், டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் போன்ற அனுபவ வீரர்கள் இருந்த போதும், இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக ஆரம்ப ஓவர்களை வீச எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்பது, எனக்கு கிடைத்த சிறப்பம்சமாக கருதுகிறேன். இருந்தாலும் நான் எப்போதும் அவர்களுக்கு பின்னாலேயே பயணிக்க விரும்புகிறேன் என்று அடக்கத்துடன் கூறினார்.

Jamieson

வெற்றி பெற்றவுடன் நாகினி டான்ஸ் ஆடுவது, வெற்றி பெறுவதற்கு முன்னரே ஆர்பாட்டத்தையும், ஆராவாரத்தையும் வெளிப்படுத்துவது போன்ற வீரர்களை உள்ளடக்கிய கிரிக்கெட் விளையாட்டில், இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக, அதுவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போன்ற மிகப் பெரிய தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின்னரும் அடக்கத்துடன் நடந்து கொண்ட கைல் ஜேமிசனின் அணுகுமுறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement