விராட் கோலியை நான் 2 முறை வீழ்த்தியது இப்படித்தான். கோலிக்கு எதிரான திட்டத்தை வெளிப்படுத்திய – ஜேமிசன்

Jamieson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அறிமுக வீரராக நியூசிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை களமிறக்கியது பெங்களூரு அணி. மிகப் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அவரது ஆட்டம் சுமாராகவே இருந்தது.

jamieson

- Advertisement -

இந்நிலையில் பெங்களூர் அணிக்காக ஒன்றிணைந்து விளையாடிய விராட் கோலி மற்றும் ஜேமிசன் ஆகியோரது மோதல் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே வலைப்பயிற்சியில் அதிகமுறை விராட் கோலி அவரை எதிர் கொண்டு இருப்பார் என்ற காரணத்தினால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமிசனுக்கு எதிராக அவர் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதிப் போட்டியில் நடந்ததே வேறு. உலகின் முன்னணி வீரரான விராட் கோலியை அந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஜேமிசன் வீழ்த்தி அசத்தியிருந்தார். குறிப்பாக முதலாவது இன்னிங்சில் 44 ரன்கள் குவித்து செட்டாகி இருந்த விராட் கோலியை வீழ்த்திய அவர் இரண்டாவது இன்னிங்சில் போது விரைவிலேயே விராட் கோலியை ஆட்டமிழக்க வைத்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Jamieson 1

இந்நிலையில் தான் விராட் கோலியை இவ்வாறு இருமுறை அவுட் ஆக்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜேமிசன் அவரது விக்கெட்டை வீழ்த்திய திட்டம் குறித்தும் தற்போது தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 14வது ஐபிஎல் தொடரில் கோலிக்கு எதிராக வலைப்பயிற்சியில் நான் அதிக முறை பந்து வீசிய அந்த அனுபவம் எனக்கு இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் கைகொடுத்தது.

- Advertisement -

மேலும் விராட் கோலி போன்ற ஒரு வீரரின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும். அவரது விக்கெட்டை வீழ்த்துவது என்பது சாதாரண விடயம் கிடையாது. எனவே அவருக்கு எதிராக நான் பந்துவீசும் போது கூடுதல் கவனத்துடன் இன்னும் அதிக அளவு ஸ்விங் செய்தும் வீசினேன். இதன் காரணமாகவே அவரை என்னால் வீழ்த்த முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரு முறை விராட் கோலியை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயம் என ஜேமிசன் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

Jamieson

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement