தோனியின் 5 வயது மகளுக்கு மிரட்டல் விட்ட நபர் இவர்தானாம் – போலீசார் அதிரடி கைது

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சி.எஸ்.கே அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாட போவதாகவும் அறிவித்து இருந்தார். அதனால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

dhoni

- Advertisement -

ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிக மோசமான செயல் பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடைசியாக நடந்த 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னை அணி தோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக 21 ஆம் தேதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சென்னை அணி அடைந்த தோல்வி மிகவும் மோசமாக அமைந்தது.

அன்றைய தினம் ஒரு மர்ம நபர் சமூக வலைத்தளத்தில் அநாகரீகமாக தோனியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார். போலியான ஐடி மூலம் அந்த நபர் அந்த பதிவினை பதிவிட்டுள்ளார். அதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இதன் எதிரொலியாக தற்போது ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sakshi

மேலும் அவரது பண்ணை வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அங்குதான் தோனி மனைவி சாக்ஷி மற்றும் ஜிவா ஆகியோர் தற்போது வசித்து வருகின்றனர். தோனி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருவதால் அவர் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் அந்த இடத்தில் நடமாடும் சில நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Ziva

இந்நிலையில் எம் எஸ் தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அநாகரிகமான முறையில் பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாக கட்ச் பகுதியில் முந்த்ராவை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் அந்த கருத்துக்களை வெளியிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். என காவல்துறை கண்காணிப்பாளர் சவுரவ் சிங் தெரிவித்துள்ளார். ராஞ்சி போலீசார் வரும் வரை தாங்கள் காத்திருப்பதாகவும் அதன்பிறகு அவரை அவர்களிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் அவர் கூறியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement