இந்தியா இலங்கை தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர் – வெளியான வீரர்களின் பட்டியல்

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆனது இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்பதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

indvssl

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபட்டு தற்போது போட்டிக்கு தயாராக இருக்கின்ற நிலையில் இன்று இலங்கை அணி இந்த தொடரில் பங்கேற்கும் தங்களது வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதில் அந்த அணியில் துவக்க வீரரான குசால் பெரேரா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து சென்ற குஷால் பெரேரா அந்த தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது 6 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என அணியின் மருத்துவர்கள் கூறி உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் அவர்கள் இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்த நிலையில் இந்திய அணி இடமும் அவர்கள் தொடரை பறிகொடுக்கும் பரிதாப நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement