அதிவேகமாக கார் ஓட்டி முதியவரை கொன்ற கிரிக்கெட் வீரர் – கைது செய்த போலீசார்

Kusal
- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது மெல்ல மெல்ல சிறிய தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றினை அனுமதியுடன் துவங்கியது.

kusal

- Advertisement -

இதில் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்தவகையில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ் இந்த பயிற்சியில் கலந்து கொண்டார். மேலும் அதன் பின்னர் நேற்று மாலை அந்நகரின் புறநகர் பகுதிக்கு சென்ற அவர் தனது காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவரின் எதிரே வந்த 64 வயது முதியவரின் மீது கார் மோதியது. கார் மோதிய வேகத்தில் சைக்கிளில் வந்த அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டார். மேலும் மருத்துவமனை செல்வதற்கு முன்னரே அந்த முதியவர் உயிரிழந்ததால் குசால் மெண்டிசை இலங்கை போலீசார் கைது செய்து ஆஜர்படுத்த உள்ளனர்.

Kusal-Mendis

மேலும் 48 மணி நேரத்திற்குள் அவர் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் விபத்தின்போது அவர் மது அருந்தி இருந்தாரா ? என்பது குறித்தும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்ட இருப்பதாக தெரிகிறது.

Kusal Perera

இலங்கை அணியின் முன்னணி வீரரான குஷால் மெண்டிஸ் 44 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 26 டி20 போட்டிகளிலும் அவர் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

Advertisement