என்னை பொறுத்தவரை இவரே இந்திய அணியின் 4 ஆவது வீரராக தொடரவேண்டும் – கும்ப்ளே பேட்டி

Kumble
- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது நாளை மறுதினம் சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

Cup

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கும்ப்ளே இந்திய அணி நான்காவது வீரர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது இந்திய அணி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடி வந்தாலும் ஒருநாள் போட்டியில் நான்காவது வீரர் மட்டுமே சற்று முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தவான் காயம் காரணமாக விலகியுள்ளதால் ராகுல் இந்த தொடர் முழுவதும் ஓப்பனிங் செய்யலாம். மேலும் கடந்த பல தொடர்களாகவே ஐயரின் வளர்ச்சி அருமையாக உள்ளது. என்னைப் பொருத்தவரை ஐயர் இந்திய அணி 4-வது வீரராக தொடரலாம். ஏனெனில் அவருடைய ஆட்டம் மிடில் ஆர்டரில் அருமையாக உள்ளது. மேலும் அவர் அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்தும் ஆடும் தன்மையும் கொண்டுள்ளதால் அவரால் நான்காவது இடத்தில் சிறப்பாக ஆட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

Iyer

கடந்த பல தொடராக தற்போது நான்காவது வீரராக விளையாடி வரும் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் எனவே இனியும் அவரே நான்காவது வீரராக தொடர வேண்டும் மேலும் நான்காவது இடத்தில் சோதனைகளை தற்போது செய்ய வேண்டாம் என்றும், ஐயருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அதுவே என்னுடைய கருத்து என்றும் கும்ப்ளே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement