தோனி இந்திய அணிக்கு திரும்ப இந்த ஒருவாய்ப்பு மட்டும் தான் உள்ளது – கும்ப்ளே ஓபன் டாக்

Kumble

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த சில தொடர்களாகவே அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் எப்போது மீண்டும் தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Dhoni

இந்நிலையில் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி எனது ஓய்வு முடிவு குறித்தும் எனது கிரிக்கெட் குறித்தும் ஜனவரி மாதம் வரை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலியும் தோனியின் ஓய்வு குறித்த முடிவு அவரே தீர்மானிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோனியின் கிரிக்கெட் வருகை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளரான கும்ப்ளே தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் விளையாட விருப்பம் காட்டுகிறார். ஆனால் அவருக்கான வாய்ப்பு இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது.

Dhoni 1

எனினும் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் நுழைய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது யாதெனில் வரும் ஐபிஎல் தொடரில் தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியில் அவரின் தேவையை புரிந்து அணியில் ஒரு பேட்ஸ்மேனாக எடுத்துக்கொள்வார்கள். மேலும் ரிஷப் பண்ட் அணியில் கீப்பராக தொடர்ந்தாலும், தோனி பினிஷராக அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

- Advertisement -

Ms Dhoni Bhuvneshwar-Kumar

இந்திய அணியின் நிர்வாகம் பண்டை ஆதரித்து தோனியை நிராகரித்தாலும் கடைசி வரிசையில் இறங்கி அணியை பலமுறை தோனி வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளதால் அவரின் அனுபவம் மற்றும் திறமை கருத்தில் கொண்டு வரும் உலக கோப்பை தொடரில் அவரை அணியில் இணைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.