டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து இவர்தான் – கும்ப்ளே புகழாரம்

Kumble

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

Ind

மேலும் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், இந்திய அணி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கும்ப்ளே பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் கும்ப்ளே கூறியதாவது : இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதுவரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பெருமைப்படும் அளவிற்கு உள்ளது. அதிலும் குறிப்பாக அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். முதல் போட்டியின்போது அவரது பந்துவீச்சும், இரண்டாவது போட்டியின் போதும் அவரது பந்து வீச்சும் சிறப்பாகவே இருந்தது. 350 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு என் வாழ்த்துக்கள்.

Ashwin 1

மேலும் அவர் பந்து வீச்சு மட்டுமின்றி ஒரு ஆல்ரவுண்டராக தனது பங்களிப்பை சிறப்பாக செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து என்றால் அஸ்வினை தான் என்று கூறுவேன் என்று கும்ப்ளே கூறினார். வரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக அனில் கும்ப்ளே சமீபத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -