மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்றைய தேர்வில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரரான கும்ப்ளே இந்திய அணியின் இளம் வீரர்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கும்ப்ளே கூறியதாவது : இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் இனி சிறப்பாக ஆட வேண்டும் என்றால் பல இளம் திறமையான வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் ஆட அனுமதிக்க வேண்டும். உலகின் மற்ற நாடுகளை வீரர்களைப் போல இந்திய வீரர்களும் வெளிநாடுகளுக்கு சென்று கிரிக்கெட் விளையாட வேண்டும்.
மற்ற நாடுகளைப் போல இந்திய வீரர்களுக்கு அவ்வளவு சலுகை கிடையாது. மற்ற நாட்டு வீரர்கள் அனைத்து வகையான நாட்டிற்கும் சென்று டி20 தொடரில் விளையாடி அந்த நாட்டின் இயல்பு நிலைக்கு ஏற்றமாதிரி அனுபவத்தை பெறுகின்றனர். ஆனால் இந்திய அணியின் இளம் வீரர்கள் இந்தியாவில் மட்டும் அடி இங்கு மட்டுமே சிறப்பாக ஆடுகிறார்கள்.

இந்திய அணியின் இளம் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடினால் அவர்களது வெளிநாட்டு அனுபவம் அதிகரிக்கும். மேலும் வெளிநாடுகளில் இந்திய அணி தோற்பதற்கு இந்த அனுபவமின்மையே காரணமாக உள்ளது. இதனால் வெளிநாட்டு தொடர்களில் இந்தியனின் இளம் வீரர்கள் சென்று விளையாட பி.சி.சி.ஐ அனுமதிக்க வேண்டும். வெளிநாடுகளில் சென்று இளம் வீரர்கள் ஆடும் போது அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகம் வரும் என்று கும்ப்ளே கூறினார்.



