ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் படைக்க உள்ள புதிய உலகசாதனை – விவரம் இதோ

kuldeep
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

kuldeep-yadav

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் ஒரு புதிய உலக சாதனை படைக்க காத்திருக்கிறார். அது யாதெனில் இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் 7 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தும் பட்சத்தில் குறைந்த போட்டிகளில் இந்திய அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடத் தொடங்கினார் அதன் பின்னர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்த சாதனையை அவர் படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement