உலககோப்பைக்கு பிறகு 4 – 5 மாதங்களாக ரொம்பவே கஷ்டப்பட்டேன் – வருத்தத்தை பகிர்ந்த இளம் வீரர்

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 340 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவன் 96 ரன்களையும், இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் 80 ரன்களை குவித்தனர்.

Ind vs Aus

- Advertisement -

அதன்பிறகு 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன்செய்து உள்ளது. ஸ்மித் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா தவிர மற்ற அனைவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறுகையில் : கடந்த நான்கைந்து மாதங்கள் உலகக்கோப்பைக்கு பின்னர் நான் மிகவும் கடினமான காலமாக உணர்ந்தேன். ஆனால் இப்பொழுது இந்த தொடரில் நான் மீண்டும் எனது பழைய ரிதம்க்கு திரும்பி உள்ளேன். என்னுடைய பௌலிங் தற்போது சிறப்பாக உள்ளது.

kuldeep

இந்த போட்டியில் முதலில் 6 ஓவர்கள் வீசினேன் அப்போது மார்னஸ் மற்றும் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். அதன்பிறகு நான் கடைசி 4 ஓவர்களை வீசி வரும்போது விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றே வந்தேன்.

Kuldeep-1

இந்த மைதானம் பிளாட்டாக இருந்ததால் மிகவும் ஸ்லோவாக இருந்தது மைதானத்தின் இந்த தன்மை எனது பந்துவீச்சு ஸ்டைலுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. இருப்பினும் சரியான ஏரியாவில் சரியான வேகத்தில் பந்து வீசியதால் என்னால் சிறப்பாக பந்துவீசிய முடிந்தது என்றும் குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement