ரொம்ப பயமா இருந்துச்சி. அதிகாலை 3 மணிக்கு கோலியோட அட்வைஸ் கேக்கலானு நெனச்சேன் – குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

Kuldeep
- Advertisement -

இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளரான 25 வயதான குல்தீப் யாதவ் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் 6 டெஸ்ட் போட்டிகள்,60 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 68 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Kuldeep

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருக்கும் இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் தான் அறிமுகமான போது தனது மனநிலை எவ்வாறு என்பது இருந்தது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் நான் விளையாடவில்லை. மைதானத்தில் இருந்து என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

சரியாக நான் களமிறங்கும் அந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் முந்தைய நாள் என்னுடன் அணில் கும்ப்ளே உணவு உட்கொண்டார். அவர் அப்போது தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் அப்பொழுது என்னிடம் வந்த அவர் நாளை நீ விளையாட போகிறாய், உன்னிடமிருந்து நான் 5 விக்கெட்டுகளை எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார். நான் அப்போது சற்று பதட்டம் அடைந்தாலும் என்னால் முடியும் என்று அவரிடம் கூறினேன்.

umesh kuldeep

அதன்பிறகு அன்றைய இரவு 9 மணிக்கு உறங்கிவிட்டேன். அதிகாலை 3 மணிக்கு எனக்கு விழிப்பு வந்தது. நான் குழப்பத்திலும் பதட்டத்திலும் இருந்தேன். அதனால் எனது பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த விராட் கோலியை எழுப்பலாம் என்று யோசித்தேன். ஆனால் அவர் என்னை என்ன நினைப்பாரோ என்று தோன்றியது.

- Advertisement -

மேலும் என்னிடம் அவர் கோபப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் நான் மீண்டும் போய் படுத்து விட்டு 6 மணிக்கு எழுந்தேன். பிறகு மைதானத்திற்கு சென்று பயிற்சியையும் செய்தேன். மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனாலும் ரஞ்சிப் போட்டியில் விளையாடியது போலவே அந்த முதல் போட்டியில் நான் என் மனநிலையை மாற்றி விளையாடினேன். மதிய இடைவேளைக்கு பிறகு எனக்கு முதல் விக்கெட் கிடைத்தது.

KuldeepYadav

அது என்னுடைய மகிழ்ச்சியான தருணம். முதல் நாள் முடிந்த பிறகு நான் சச்சின் டெண்டுல்கரிடம் பேசினேன். அவர் எனக்கு பல ஆலோசனைகளையும், பல விஷயங்களையும் கூறினார். சரியான நிலையை அடைய எவ்வளவு உழைக்க வேண்டும் என்று அன்றைய நாள் நான் படுக்கையில் படுத்து யோசித்துக் கொண்டிருந்தேன் என்று தனது அறிமுக போட்டி குறித்து அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement