நான் மீண்டும் வந்து சிறப்பாக பந்துவீச இவரது வார்த்தைகளே காரணம் – மனம்திறந்த குல்தீப் யாதவ்

Kuldeep
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நேற்று கொழும்பு பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 262 ரன்களை குவிக்க 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது போலவே பந்துவீச்சு துறையிலும் அனைவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்து இருந்தனர். குறிப்பாக கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் குல்தீப் யாதவ் இந்த போட்டியில் சாஹலுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து விளையாடினார்.

9 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் ஓவர் வீசியது மட்டுமின்றி 48 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஏற்கனவே கடந்த ஓராண்டிற்கும் மேலாக தனது மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் இந்திய அணியில் திரும்ப இந்த இலங்கை தொடரை அதிகம் எதிர்பார்த்திருந்தார்.

அதன்படி இந்த போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசி அருமையான பார்மை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீச காரணம் யார் என்று அவர் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார் இதுகுறித்து அவர் கூறுகையில் : நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் தற்போது விளையாடுவதால் அனைவருக்கும் இருப்பதுபோல பதட்டமும், நெருக்கடியும் எனக்கும் இருந்தது.

kuldeep 1

ஆனால் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியாளர் டிராவிடுடன் எனது பந்துவீச்சு குறித்து நிறைய விஷயங்கள் ஆலோசித்தேன். அவரது வார்த்தைகளும் அவர் கொடுத்த ஊக்கமும் இன்று எனது சிறப்பான பந்து வீச்சுக்கு காரணம். அணியின் வெற்றியில் எனது பங்களிப்பும் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement