IND : தோனி கொடுக்கும் ஐடியா எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது – குல்தீப் யாதவ்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

kuldeep1
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் தோனி முறித்து முக்கியமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது : தோனி எனக்கு அளித்த டிப்ஸ்களில் நிறைய முறை அது தப்பாக சென்றிருக்கிறது சில முறை அவர் கூறுவது போல நடந்தாலும் பல முறை தவறாக நடக்கும். ஆனால், அது குறித்து தோனியிடம் இது சென்று கேட்க முடியாது. மேலும், தோனி யாரிடமும் அதிகம் பேசமாட்டார் தேவைப்பட்டால் மட்டுமே பேசுவார் அதேபோன்று ஓவர்களுக்கு மத்தியில் தான் பந்துவீச்சாளர்களுக்கு டிப்சை தருவார்.

kuldeep-yadav

மேலும் அவர் விரும்பினால் மட்டுமே அதே போன்று நடந்து கொள்வார் மற்ற நேரங்களில் அவர் பொறுமையாக இருப்பார் என்றும் குல்தீப் யாதவ் கூறினார். உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் இந்த சமயத்தில் தோனி குறித்து அதே அணியில் விளையாடும் குல்தீப் யாதவ் கூறியுள்ள இந்த கருத்து தற்போது சசர்ச்சையாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement