நான் என்னதான் சிறப்பாக பந்துவீசினாலும் எனது வெற்றிக்கு தோனியே காரணம் – மனம்திறந்த இளம் வீரர்

kuldeep-yadav
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள்களாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஜோடிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு குல்தீப் யாதவ் மற்றும் யுசுவேந்திர சாஹல் ஆகிய இருவரும் தற்போது முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருக்கின்றனர்.
இந்த இருவரின் வெற்றிக்கு காரணம் அவர்களது திறமையாக இருந்தாலும் களத்தில் ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பர் தோனியாகத்தான் பல நேரங்களில் இருந்துள்ளது.

kuldeep

- Advertisement -

தற்போது 25 வயதே ஆன குல்தீப் யாதவ் 6 டெஸ்ட் போட்டிகளிலும், 60 ஒருநாள் போட்டிகளிலும், 21 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது வரை இந்திய அணியில் யாருடைய உதவியுடன் நன்றாக பந்து வீசிக்கொண்டிருக்கிறேன் என்பது பற்றி கூறியுள்ளார். அவர் கூறுகையில்…

தோனி பல வீரர்களுக்கும் உதவுவது போல் எனக்கும் நிச்சயமாக உதவியிருக்கிறார். ஒரு பந்துவீச்சாளறுக்கு சிறந்த விக்கெட் கீப்பர் அமைவது என்பது மிகப்பெரிய பாக்கியம். ஏனெனில் பேட்ஸ்மேன்களின் நகர்வுகளை கணித்து, அதற்கு ஏற்றார்போல் பந்துவீசி விக்கெட் கீப்பர்கள்தான் பெரிதும் உதவுவார்கள்.

kuldeep1

அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். தோனியை மட்டுமே நான் சார்ந்து இருந்திருக்கவில்லை. ஆனால், என்னுடைய வெற்றியில் 50% தோனிக்கு சொந்தம்தான். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் கடந்த 10 வருடங்களாக தோனியை சார்ந்த அதிக விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர் என்று கூறியுள்ளார் குல்திப் யாதவ்.

மேலும் எனக்கும் தோனிக்கும் இடையேயான உறவு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் தரும் ஊக்கம் இளம்வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்களை சிறப்பாக செயல்பட வைக்கும். மேலும் கடந்த பல மாதங்களாக தோனி இல்லாமல் அணியில் உற்சாகம் இன்றி காணப்படுகிறது. மீண்டும் அவருடன் இணைந்து விளையாட ஆவலாக உள்ளதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement