இவங்க 2 பேருக்கு பந்துவீசுவதுதான் ரொம்ப கஷ்டம் – குல்தீப் யாதவ் ஓபன் டாக்

Kuldeep
- Advertisement -

இந்திய அணிக்கு இடதுகை சைனாமேன் கிடைப்பது பல ஆண்டுகால தவமாக இருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக 19 வயதுக்குட்பட்டோர் தொடரின் மூலம் வந்து சேர்ந்தார் குல்தீப் யாதவ். அவர் ஒரு சைனாமேன் பந்து வீச்சாளர். 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார்.
அதன் பின்னர் கொல்கத்தா அணிக்காக விளையாடி விட்டு விராட் கோலியின் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.

Kuldeep-1

- Advertisement -

பல தொடர்களில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார். குல்தீப் மற்றும் சாஹல் ஜோடி ஜொலிக்க துவங்கியதும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனே. இருவரும் சிறப்பாக தற்போது வரை பந்து வீசி வருகின்றனர். இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று வருடமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் அவர் எந்த சர்வதேச வீரர்களுக்கு பந்து வீசுவது மிகக் கடினம் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

ஸ்டீவன் ஸ்மித் எனது பந்துவீச்சை பின்னால் சென்று அருமையாக ஆடுவார். மிகவும் தாமதமாக விட்டு ஆடுவார். அதனால் அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். அதேபோல் ஒரு நாள் போட்டிகளில் ஏபி டிவிலியர்சுக்கு பந்து வீசுவது என்பது சாதாரண காரியமல்ல. மிகவும் தனித்துவமான ஆட்டத்தை கொண்டவர் அவர்.

smith 1

இந்த இரண்டு பேரை தவிர வேற எந்த ஒரு பேட்ஸ்மேனையும் கண்டு நான் பயந்ததில்லை என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ். தற்போது வரை இவர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் 51 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 109 விக்கெட்டுகளையும் இருபத்தி ஒரு டி20 போட்டிகளில் ஆடி 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ABD

கொரோனா பாதிப்பினால் கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் முன்னணி வீரர்கள் பலரும் தங்களது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில் குல்தீப் யாதவ் பகிர்ந்த இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement