அவரோட விக்கெட் தான் டர்னிங் பாய்ண்ட்.. இந்தியாவை வெற்றி பெற வைத்த திட்டம் பற்றி.. குல்தீப் பேட்டி

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135, கேப்டன் ராகுல் 60, ரோஹித் சர்மா 60, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா முடிந்தளவு போராடியும் 49.2 ஓவரில் 332 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 67, மார்கோ யான்சென் 70, மேத்தியூ பிரட்ஸ்கே 72 ரன்கள் எடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

திருப்பு முனையான விக்கெட்:

முன்னதாக அப்போட்டியில் 130/5 என சரிந்த தென்னாப்பிரிக்காவுக்கு மேத்தியூ – யான்சென் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கினர். அப்போது அவர்களை 34வது ஓவரில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் திருப்புமுனையை உண்டாக்கினார் என்றே சொல்லலாம். இந்நிலையில் நல்ல பந்துகளையும் அடித்த மார்கோ யான்சென் விக்கெட் தான் இந்தியாவின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்ததாக குல்தீப் தெரிவித்துள்ளார்.

அதற்காக தாம் பின்பற்றிய திட்டங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் ஸ்பெல்லுக்கு பின் மீண்டும் நான் பந்து வீச வந்த போது ராகுலுடன் பேசினேன். அந்த சூழ்நிலை பந்து வீசுவதற்கு கடினமாக இருந்த போதிலும் நாங்கள் அட்டாக் செய்ய விரும்பினோம். ஏனெனில் வெற்றி பெறுவதற்கு விக்கெட்டுகள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் நான் சீம் பந்துகளை கலக்கி போட்டேன்”

- Advertisement -

குல்தீப் மகிழ்ச்சி:

“ஃபுல் லென்த் பந்துகளை தொடர்புப்படுத்தாமல் வீசுவதற்கு எளிதாக இருந்தது. 34வது ஓவருக்குப்பின் பந்தை வீசுவது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் பனியின் காரணமாக பந்து ஈரமானது. அதை சமாளிப்பதற்காக நாங்கள் கையில் புழுதியைத் தடவிக்கொண்டு பந்தை மாற்றிக் கொடுக்குமாறு தொடர்ந்து நடுவர்களிடம் கேட்டோம். அதுவே எங்களுடைய திட்டமாக இருந்தது”

இதையும் படிங்க: விராட், ரோஹித் யார்ன்னு காமிச்சாலும்.. இந்தியாவின் வெற்றிக்கு அந்த 2 பேர் தான் காரணம்.. ராகுல் பாராட்டு

“கோர்பின் போஸ்க், யான்சென் ஆகியோரிடமிருந்து நாம் நல்ல ஆட்டத்தைப் பார்த்தோம். அவர்களுடைய விக்கெட்டை எடுக்க நாங்கள் விரும்பினோம். அதற்காக நான் சில பந்துகளை மெதுவாக காற்றில் வீசினேன். நீங்கள் சேமிப்பில் வைத்திருக்கும் பந்துகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது. பல்வேறு பந்துகளைக் கலக்கி எதிரணி பேட்ஸ்மேன்களை யோசிக்க வைக்க வேண்டும். அதை செய்து கொண்டே விக்கெட் டூ விக்கெட்டில் பந்துகளைப் போட வேண்டும். அதுவே எனது திட்டம். யான்சென் நல்ல பந்துகளை கூட அனைத்து புறங்களிலும் அடித்து நொறுக்கினார். அவரை அவுட்டாக்க உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். அந்த விக்கெட்டே போட்டியை மாற்றியது” என்று கூறினார்.

Advertisement