அந்த இடத்தில் இந்த நடிகை என் கூட இருந்தால் நன்றாக இருக்கும்..! குல்தீப் யாதவ் அதிரடி..! – எதற்கு தெரியுமா..?

yadav
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் முதல் சைனா மேன் பந்துவீற்சளாராக இருந்து வருபவர் குல்தீப யாதவ். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் சமீபித்தல் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குல்தீப் யாதவ் நடிகை ஜாகுலீன் பெர்னாண்டஸ் குறித்து ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கை பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குல்தீப் யாதவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. அப்போது “ஒரு வேலை நீங்கள் பாலை வனத்திற்கு சென்றால், உங்களிடம் என்ன இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது.
jacqueline
இதற்கு குல்தீப் யாதவ் சற்றும் யோசிக்காமல் ‘என்னுடன் ஜாகுலீன் பெர்னாண்டஸ் ‘ இருந்தால் நன்றாக இருக்கும் என்று பதிலளித்தார். பாலிவுட் நடிகைகள் எவ்வளவோ பேர் இருக்க குல்தீப் யாதவ் எதற்காக ஜாகுலீன் பெர்னாண்டஸ் பெயரை கூறினார் என்று ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

Advertisement