
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பெற்று அசத்தியது.
அதே வேளையில் கொல்கத்தா அணி ஏழாவது தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.
பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 163 ரன்களுக்கு சுருண்டதால் டெல்லி அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக களமிறங்கிய ரிங்கு சிங்கை வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அப்படி நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியின் போது இரண்டாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சார்பாக ரிங்கு சிங் ஆறாவது வீரராக களமிறங்கினார். அப்படி களமிறங்கிய அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஸ்டப்ஸ்-இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் தனது ஐபிஎல் கரியரில் முதல் முறையாக ரிங்கு சிங் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதையும் படிங்க : இந்த சீசன்ல இப்படி நடந்தது வருத்தமா இருக்கு.. டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பின் – ரஹானே பேச்சு
கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் இதுவே அவர் டக் அவுட்டாவது முதல் முறை. இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ரிங்கு சிங்கை முதல் முறையாக டக் அவுட் செய்த பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.