நான் சொல்றேன் இல்ல ரெவியூ எடுங்க.. ரிஷப் பண்டின் கையை பிடித்து கட்டாயப்படுத்திய குல்தீப் யாதவ் – நடந்தது என்ன?

Kuldeep
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது முதல் வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஒன்பதாவது லீக் போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏனெனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. சமபலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் நேற்று டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. அதனால் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கினை துரத்தி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 173 ரன்களை மட்டுமே குவித்ததால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் சாம்சன் விக்கெட்டை இழந்து சரிவை சந்தித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து பட்லருடன் இணைந்து ரியான் பராக் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் போட்டியின் எட்டாவது ஓவரின் இரண்டாவது பந்தை வீசிய குல்தீப் யாதவ் பந்தில் பட்லர் கால் பகுதியில் பேடில் வாங்கினார். அது நிச்சயம் lbw தான் என்று அம்பயரிடம் அப்பீல் செய்ய அம்பயரோ அவுட் கொடுக்க மறுத்தார்.

இதையும் படிங்க : அந்நியனாக மாறிய அஷ்வின்.. டெல்லி அணியை வீழ்த்த காரணமே அவர்தான் – வியக்க வைத்த அதிரடி

உடனே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் சென்ற குல்தீப் யாதவ் அது அவுட் என்று கூறினார். ஆனால் ரிஷப் பண்ட் டி.ஆர் =.எஸ் எடுக்காமல் தயங்கியபடி நின்றார். அப்போது குல்தீப் யாதவ் நிச்சயமாக அது அவுட் தான்.. நான் சொல்கிறேன் கேளுங்கள்.. என்று கேப்டன் பண்ட்டின் கையை கட்டாயமாக பிடித்து ரிவியூ எடுக்க வைத்தார். ரீபிளேவில் அது அவுட் என்றும் தெரிய வந்தது. இந்த விடயம் தற்போது இணையத்திலும் வீடியோவாக வரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement