கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை – இனிமே வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்

Kuldeep
- Advertisement -

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டி இன்று தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

toss

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முதல் 2 போட்டிகளிலும் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்ட அவர் அதிக ரன்களை வாரி வழங்கியதாலும் விக்கெட்டை வீழ்த்த தவறியதாலும் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு கோலியின் தலைமையின் கீழ் அறிமுகமான அவர் சிறப்பான பவுலராக இருந்து வந்தார். மேலும் விக்கெட் கீப்பிங்கில் தோனி இருக்கும் வரை சிறப்பாக பந்துவீசி வந்த இவர் கடந்த பல தொடர்கள் ஆகவே பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் இல் தடுமாற்றத்தை ஆரம்பித்த அவர் அதன் பின்னர் தொடர்ச்சியாக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

kuldeep

குறிப்பாக விக்கெட் வீழ்த்த முடியாமல் தவிக்கும் அவர் ஆரம்ப காலத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்ததால் அவரின் மீது சிறிதளவு நம்பிக்கை வைத்து இந்திய அணி வாய்ப்புகளை வழங்கி வந்தது. ஆனால் சமீப காலமாகவே மோசமாக செயல்படும் அவர் இந்தத் தொடரிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Kuldeep-1

எனவே அவர் இந்த போட்டியில் மட்டுமல்ல இனி இந்திய அணியில் இருந்தும் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏனெனில் சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், அக்சர் பட்டேல்,வருண் சக்ரவர்த்தி என வரிசையாக வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் குல்தீப் யாதவின் வாய்ப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement