- Advertisement -
இந்திய கிரிக்கெட்

134 பந்தில் 19 ரன்ஸ்.. சச்சின், டிராவிட்டை மிஞ்சிய குல்தீப் சாதனையுடன்.. மொத்த இந்திய அணிக்கும் பாடம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்ததாக நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இந்தியாவும் தங்களது சொந்த மண்ணில் தெனாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக விளையாடிய இந்தியா போராடி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் இந்திய அணிக்கு 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ராகுல் 22, ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

டிராவிட், சச்சினை குல்தீப்:

ஆனால் மிடில் ஆர்டரில் சாய் சுதர்சன் 15, துருவ் ஜுரேல் 0, கேப்டன் ரிஷப் பண்ட் 7, ரவீந்திர ஜடேஜா 6, நிதிஷ் ரெட்டி 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 122/7 என திணறிய இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது நிதானமாக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் நங்கூரமாக விளையாடி சரிவை தடுத்து நிறுத்தினார்.

அவருடன் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் அரை சதத்தை நெருங்கிய போது 48 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் இரு மடங்கு நங்கூரமாக விளையாடிய குல்தீப் 14.18 ஸ்ட்ரைக் ரேட்டில் 134 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் வாயிலாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் குறைந்தது 100 பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை குல்தீப் படைத்துள்ளார்.

- Advertisement -

மொத்த அணிக்கும் பாடம்:

இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் ராகுல் டிராவிட் 140 பந்துகளில் 21 ரன்களை 15.00 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்ததே முந்தைய சாதனை. 3வது இடத்தில் இலங்கைக்கு எதிராக 126 பந்துகளில் சச்சின் டெண்டுல்கர் 22 ரன்களை 17.45 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த இன்னிங்ஸ் இருக்கிறது. அவர்களை மிஞ்சிய ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் மொத்த இந்திய அணிக்கும் கடினமான சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை பாடமெடுத்தார் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: 3 ஆம் இடத்தில் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட சாய் சுதர்சன் – ரசிகர்கள் விமர்சனம்

குறிப்பாக ரிஷப் பண்ட், ஜுரேல் ஆகியோருக்கு அவருடைய ஆட்டம் எடுத்துக்காட்டாக இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்க்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் மீண்டும் விளையாடும் தெனாப்பிரிக்கா 3வது நாள் முடிவில் 26/0 ரன்களை எடுத்துள்ளது. அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -