டி20 போட்டியில் இடம்பெறாதது எனக்கு வருத்தம் இல்லை. காரணம் இதுதான் – குல்தீப் யாதவ்

kuldeep
- Advertisement -

இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் என குல்தீப் யாதவ் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளும் மற்றும் 18 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அவர் கடைசியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தற்போதைய தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து குல்தீப் யாதவ் பேட்டி ஒன்றினை தற்போது அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது : நான் இதுவரை குறுகிய வடிவிலான போட்டியில் அதிகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.இருப்பினும் கடந்த 2 டி20 தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைகாத்து பற்றி எனக்கு கவலை இல்லை ஏனெனில் எனக்கு தற்போது ஓய்வு தேவை என்று தேர்வாளர்கள் நினைத்திருக்கலாம்.

Kuldeep

மேலும் இந்த ஓய்வு எனக்கு டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க நன்றாக வாய்ப்பாக அமையும். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் ஆடும் போது உடனடியாக சாதிப்பது கடினம் எனவே டெஸ்ட் அணியில் என்னை நிரந்தரமாக இடம் பெறச் செய்ய இந்த ஓய்வு எனக்கு வாய்ப்பளிக்கும் என்று குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement