தோனி இருக்கும் வரை எல்லாம் சரியா இருந்துச்சி.. ஆனா இப்போ – வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து – வருத்தத்தில் பேசிய இளம்வீரர்

kuldeep1
- Advertisement -

இந்திய அணியில் 2017ஆம் ஆண்டு சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து சிறப்பாக விளையாடினார். தோனியின் ஆலோசனைகளின் கீழ் இவர்கள் இருவரும் பந்து வீசிய விதம் சிறப்பாக இருந்தது. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஒன்றாகவே விளையாடி வந்தனர். ஆனால் 2019ஆம் ஆண்டு தோனி ஓய்வடைந்ததிலிருந்து இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இதுவரை விளையாடவில்லை.

chahal

மேலும் சாஹலுக்கு அவ்வப்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தாலும், குல்தீப் யாதவ் அணியிலிருந்து தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது புறக்கணிப்பு குறித்து பேசிய குல்தீப் யாதவ் கூறுகையில் : சில சமயம் நான் தோனியின் வழிகாட்டுதலை மைதானத்தில் தவறு விடுகிறேன். அவருடைய அனுபவம் எனக்கு பந்துவீச மிகவும் உதவியாக இருந்தது.

- Advertisement -

அவர் ஸ்டம்ப்பிற்க்கு பின்னால் இருந்து அவர் கொடுக்கும் யோசனைகளை பின்பற்றி நான் பந்து வீசி வந்தேன். ஆனால் தற்போது ரிஷப் பண்ட் அந்த அளவிற்கு இன்னும் முன்னேறவில்லை என்றும் இனி வருங்காலத்தில் அவர் அனுபவம் பெற்ற பின் நிச்சயம் பவுலர்களுக்கு உதவுவார் என்றும் கூறியுள்ளார்.

Kuldeep-1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தோனி இருக்கும் வரை எனக்கும் சாஹலுக்கும் ஒன்றாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தோனி சென்ற பிறகு நாங்கள் இருவரும் ஒரு போட்டியில் கூட ஒன்றாக விளையாடவில்லை. நான் சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தாலும் எனக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

Kuldeep

என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு திறனும் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் என்னை அணியில் சேர்க்கவில்லை என்பது தனது வருத்தத்தை அளிப்பதாக பகிர்ந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் குல்தீப்புக்கு இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கூட ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.

Advertisement