இப்பவும் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தகுதியோடு தான் இருக்கிறார் – இளம் வீரர் பேட்டி

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. தற்போது இந்திய அணியில் இடம் இல்லாமல் இருக்கிறார். உலக கோப்பை தொடரின் செமி பைனல் போட்டிக்குப் பின்னர் 9 மாதங்களாகிறது. அவர் தொடர்ச்சியாக மௌனம் காத்து வந்ததால் அவர்கள் ஒப்பந்தத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது.

Dhoni

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்திருந்த அவரது எண்ணம் தற்போது தவிடுபொடி ஆகி விட்டது. 38 வயது ஆனாலும் இன்னும் அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் ஆடுகளத்தில் தோனியை கண்டிப்பாக மிஸ் செய்கிறேன். அவர் அருமையான ஒரு சீனியர் வீரர். அவரது ஓய்வு என்பது தனிப்பட்ட முடிவு அவர்தான் அதை எடுக்க வேண்டும். அவரது ஓய்வை பற்றி நாம் விவாதம் செய்வது சரியாக இருக்காது. ஆனால், ஒன்று மட்டும் என்னால் கூறமுடியும் அவர் இப்போதும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.

dhoni

ஒரு ரசிகராக தோனியை நான் இன்னும் அதிகம் விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் அவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அவர் களத்தில் இருந்தால் எங்களுக்கு இன்னும் எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ். இவர் இப்படி பேசிக் கொண்டிருக்க சுனில் கவாஸ்கர், விரேந்தர் சேவாக், லட்சுமணன் போன்றவர்கள் இதுவும் இந்திய அணிக்கு ஆடியது போதும் எனவும் அவர் சீக்கிரம் ஓய்வு பெறலாம் எனவும் அவரை புறம்தள்ளி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் தோனியோ இன்னும் ஓய்வு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். மேலும் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருந்த அவருக்கு இந்த கொரோனா வைரஸால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Dhoni 1

எது எப்படி இருந்தாலும் தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதற்கான முடிவு தோனியின் கைகளில் தான் உள்ளது. இருப்பினும் தேர்வுக்குழு தோனியை தாண்டி அடுத்த விக்கெட் கீப்பருக்கான தேடலில் இறங்கிவிட்டது. மேலும் அவருக்கான மாற்றுவீரரையும் தேர்ந்தெடுக்கும் தீவிரத்தில் அணி நிர்வாகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement