இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் மிரட்டுவார்..! ஆஸி. சைனாமேன் கணிப்பு..! – யார் தெரியுமா..?

kuldeep
- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி சைனா மேன் குல்தீப் யாதவின் மாயாஜால சுழல் பந்து வீசிசால் இங்கிலாந்து அணி திணறியது. குல்தீப் யாதவின் பந்துவீச்சி குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் ப்ராட் ஹாக் புகழ்ந்துள்ளார்.

கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க 5 ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இந்திய அணியின் சைனா மேன் குல்தீப் யாதவ் கைப்பற்றினர்.அதிலும் இந்த போட்டியின் 14 வது ஒவரில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணி வீரர்களை திணறடித்தார்.

இந்த போட்டி முடிந்து குல்தீப் யாதவ் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் பேசியபோது கூட” குல்தீப் யாதவ் இந்த தொடரில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் கண்டிப்பாக ஒரு அச்சுறுத்தலாக இருப்பார்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் ‘சைனா மேன்’ என்று கருத்தப்பட்ட பிராட் ஹாக் , குலதீப் யாதவ் இங்கிலாந்து தொடரில் நிச்சயம் ஜொலிப்பார் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
Brad hagg
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ப்ராட் ஹாக் தெரிவிக்கையில் ‘இந்திய சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இங்கிலாந்து தொடரில் சாதிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. அவர் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிப்பதற்குள் வேகமாக வீசுகிறார். அவரது பந்து வீசும் விதத்தை மேலும் மெருகேற்றிகொள்ள வேண்டும். அவர் பந்துகளை இன்னும் பௌன்ஸ் செய்ய வேண்டும். சஹாளை விட குல்தீப் பந்துகளை வேகமாக சுழன்று வீசுகிறார். இது தான் சஹாலிற்கு இருக்கும் பலவீனம். இந்த தொடரில் குல்தீபிற்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் அதிகம் சாதிப்பார்.’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement