இங்கிலாந்துக்கு எதிராக நாளை முதல் டெஸ்ட்.! குல்தீப், ராகுல் விளையாடுவது சந்தேகம்தான்.?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 1) துவங்கவுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 கணக்கில் இந்திய அணியும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 கணக்கில் இங்கிலாந்து அணியும் கைப்பற்றியது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் கே எல் ராகுலுக்கு அணியில் வாய்ப்பளிக்கபடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியில் விராட் கோலி, ஷிகர் தவான் ,கே எல் ராகுல் ,முரளி விஜய் ,சடீஸ்வர் புஜாரா,அஜின்கியா ரஹானே ,கருண் நாயர் ,தினேஷ் கார்த்திக் ஆகிய ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இவர்களை எல்லாம் தாண்டி பிளையிங் லவனில் கே எல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் கடினம் என்று கூறப்படுகிது.

அதே போல இந்திய அணியின் சைனா மேன் என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால், அணியில் ஏற்கனவே அனுபவமிக்க சுழல் பந்து வீச்சாளராகளான அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம்பெற்றுள்ளதால், அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார் என்பது கொஞ்சம் கடினமான விடயமாக உள்ளது.

நாளை நடக்கப்போகும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் உத்யேச ப்ளேயிங் லவன் பட்டியில் முரளி விஜய், தவான், புஜாரா, கோலி, அஜின்கியா ரஹானே, தினேஷ் கார்த்திக்,மொஹமத் சமி,ஹார்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா