நாளைய போட்டியில் இவர் விளையாட வாய்ப்பே இல்லையாம் – இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள வீரர்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை 26ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

prasidh-krishna

இந்நிலையில் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடரில் பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கின்றனர். மேலும் தற்போது உள்ள இந்திய அணி மிகவும் பலமாக உள்ளதால் எப்பொழுதும் அணியில் சில மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது 2வது ஒருநாள் போட்டியில் முக்கிய வீரர் ஒருவர் இந்திய அணியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அந்த வீரர் யாரெனில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தான். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தனது மோசமான பந்துவீச்சால் புறக்கணிக்கப்பட்டு வரும் அவர் தற்போது ஒருநாள் போட்டியில் மீண்டும் தனது வாய்ப்பை இழந்துள்ளார்.

kuldeep

ஏனெனில் முதலாவது ஒருநாள் போட்டியில் அவரை தவிர மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை கைப்பற்ற இவர் விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களுக்கு 68 ரன்களை வாரி வழங்கினார். ஏற்கனவே தனது பந்துவீச்சில் தடுமாறி வரும் குல்தீப் யாதவ் முதலாவது போட்டியிலும் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு பதிலாக சாஹல் மீண்டும் அணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. டி20 போட்டிகளின் போது அதிக ரன்களை விட்டுக் கொடுத்த காரணத்தினால் சாஹலுக்கு முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

kuldeep 1

ஆனால் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட குல்தீப் மோசமாக செயல்பட்டதால் நிச்சயம் இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. மேலும் அவருக்கு பின்னர் பல இளம்வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பதால் அவர் மீண்டும் அணியில் விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதே வகையில் முதலாவது போட்டியில் போது காயமடைந்த ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் அதற்கு பதிலாக புதுமுக வீரரான சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இணைவார்கள் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement