மே.இ தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் படைக்க உள்ள மிகப்பெரிய சாதனை – விவரம் இதோ

kuldeep
- Advertisement -

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணி குல்திப் யாதவ் இந்த போட்டியில் மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

அந்த சாதனை யாதெனில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளரான இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அறிமுகமானதில் இருந்து சிறப்பாக பந்து வீசி வரும் இவர் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர். எனவே ஒருநாள் போட்டியில் தொடர்ந்து கோலி அவரை தேர்வு செய்து வருகிறார்.

- Advertisement -

இதுவரை 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குல்திப் யாதவ் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் அவர் 4 விக்கெட்களை வீழ்த்தினால் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனை படைப்பார். இவருக்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருப்பவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 56 போட்டிகள் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக உள்ளது.

KuldeepYadav

இதற்கு முன்னதாக உலக அளவில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் குல்தீப் யாதவ் படைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியதால் அந்த வாய்ப்பை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement