தோனி கோபப்பட்டு என்னை கண்டபடி திட்டிவிட்டார். அவரின் உண்மையான முகத்தை நான் பார்த்து இருக்கிறேன் – இளம்வீரர் பகிர்வு

- Advertisement -

பொறுமைக்கு உருவமான வடிவமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் இன்று வரை பார்க்கப்படுகிறார். எப்பேற்பட்ட பெரிய போட்டியாக இருந்தாலும் இறுதிவரை தனது பொறுமையை இழக்காமல் களவியூகத்தினை அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு செல்வதில் உலக அளவில் தோனியே சிறந்த கேப்டன் என்பது அறிந்ததே. ஆனால் தற்போது அப்படி அமைதியான தோனி கோவத்தில் குல்தீப் யாதவினை திட்டிய சம்பவம் வெளியாகியுள்ளது.

dhoni

அதன்படி குறிப்பிட்ட ஒரு போட்டியில் குல்தீப் யாதவை மகேந்திர சிங் தோனி திட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது நிதானமான தலைமைக்கு பெயர் பெற்றவர் . இந்த அணுகுமுறையால் கேப்டன் கூல் என்றும் அவருக்கு பெயர் உள்ளது.

- Advertisement -

இக்கட்டான சூழ்நிலைகளிலும், வீரர்கள் தவறிழைக்கும் போது கோபமும், பதட்டமும் படாமல் அவர்களை நல்வழிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்வார். வீரர்களை கையாள்வதில் அவர் வல்லவர். அவருக்கு போட்டி குறித்த அறிவு இளம் வீரராக இருக்கும்போதே மிகத் தெளிவாக இருந்துள்ளது. அதனால் பந்துவீச்சாளர்களுக்கு கள வியூகம் மற்றும் எங்கே பந்து வீசுவது என அனைத்தையும் கூறுவார். இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 300 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்துள்ளார்.

kuldeep-yadav

அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். இவர் கேப்டனாக இருக்கும் போதும் கூட தோனியைத்தான் அவ்வப்போது அணுகி சிறந்த முடிவுகளை எடுப்பார். அப்படியிருக்கையில் தோனியின் பேச்சை கேட்காமல் அவரிடம் திட்டு வாங்கிய சம்பவத்தை பற்றி குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

2017ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக இந்தூர் மைதானத்தில் டி20 போட்டி நடந்து கொண்டிருந்தது. அதை நான் வீசிய பந்து ஒன்றை குசால் பெரேரா பவுண்டரி அடித்தார். இதனால் கீப்பிங் செய்துகொண்டிருந்தது தோனி பீல்டிங்கை மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர் கூறியதை நான் கேட்கவில்லை. மீண்டும் நான் வீசிய பந்தை பவுண்டரி அடித்தார் குசால் பெரேரா.

kuldeep1

இதனால் கோபமான தோனி என்னிடம் வந்து, நான் 300 போட்டிகளில் ஆடி இருக்கிறேன். என் பேச்சை நீ கேட்க மாட்டாயா? என்னை பார்த்தால் லூசு மாதிரி தெரிகிறதா? என்று கோபமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் என இந்த சம்பவத்தை பற்றி தற்போது நினைவு கூர்ந்தார் குல்தீப் யாதவ். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement