இப்போதா வந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள இப்படி ஒரு ரெக்கார்டா ? – அசரவைத்த குல்தீப் யாதவ்

Kuldeep-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 340 ரன்கள் குவித்து பெரிய இலக்கினை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.

Ind vs Aus

அதன்படி தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது. முதல் போட்டியில் அவர்களின் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத இந்திய அணி நேற்று அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

- Advertisement -

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அதனைப் போன்றே குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியத வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவர் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி ஆட்டத்தை திருப்பினார்.

kuldeep

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர் இதுவரை இந்திய அணிக்காக 58 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Kuldeep 2

இதன்மூலம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக குறைவான போட்டிகளில் மிகவிரைவாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement