ஜடேஜாவின் இடத்திற்கு போட்டியிடும் 2 வீரர்கள். ஆனாலும் அவரது இடத்தை நிரப்ப முடியாது – விவரம் இதோ

Jadeja-2

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது போட்டி இன்னும் சில தினங்களில் பிரிஸ்பேன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு தற்போது சிக்கலாகி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேற தற்போது 3வது போட்டியில் விளையாடிய மூன்று வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர்கள் 4 ஆவது போட்டிக்கான அணியில் இருந்து விலக உள்ளனர். அதனால் மாற்று வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

jadeja 1

ஏனெனில் விஹாரி, ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய முக்கிய மூன்று வீரர்கள் நான்காவது போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக பும்ராவிற்கு பதிலாக எந்த வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது விஹாரிக்கு பதிலாக எந்த பேட்ஸ்மேனை சேர்ப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. அதேபோன்று ஜடேஜாவின் விலகல் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

ஏனெனில் ஜடேஜா பேட்டிங் பந்துவீச்சு என அசத்தலாக விளையாடக் கூடியவர். அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்தாலும் அவருக்கு நிகராக பீல்டிங் செய்யும் வீரரை இந்திய அணியில் நிச்சயம் தேர்வு செய்ய முடியாது. அந்த அளவிற்கு ஜடேஜா ஒரு மதிப்பு மிக்க வீரராக இந்திய அணியில் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜடேஜாவின் இடத்தை பூர்த்தி செய்ய இரண்டு வீரர்கள் தற்போது போட்டியில் உள்ளனர்.

jadeja 1

அந்த வகையில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அந்த இடத்தில் உள்ளனர். ஆனால் இந்த இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் நிர்வாகம் உள்ளது. ஏனெனில் பந்து வீச்சாளரை தேர்வு செய்தால் பேட்டிங் வரிசை பலமிழக்கும் அதேபோன்று பேட்ஸ்மேனை தேர்வு செய்தால் பந்துவீச்சில் பலமிழக்கும் இதன் காரணமாக 4வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவிற்கு பதிலாக யார் விளையாடுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Sundar-1

இருந்தாலும் ஜடேஜாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அணி நிர்வாகமும் நான்காவது போட்டிக்கான வீரர்கள் எவ்வாறு தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.