பண்டிற்கு பதிலாக இந்திய அணியில் இணைந்துள்ள இந்த வீரரை உங்களுக்கு தெரியுமா? – ஆனாலும் விளையாடமாட்டாரு

Pant-3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

Pant 1

- Advertisement -

இந்நிலையில் தொடரின் வெற்றியை முடிவுசெய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையான போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்த இந்திய அணி இம்முறை பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் பண்ட் பேட்டிங் செய்தபோது கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் தலையில் அடி வாங்கி ஆட்டமிழந்து வெளியேறினார். பந்து அவரது ஹெல்மெட்டில் பலமாக தாக்கியதால் அவருக்கு மூளையில் சிறிய அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக அந்தப் போட்டியின் செகண்ட் இன்னிங்சில் பண்ட் கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் கீப்பிங் செய்தார்.

அதனை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் பண்டிற்கு காயம் ஏற்பட்டதால் இந்திய அணியின் மாற்று விக்கெட் கீப்பராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் தொடர்களில் அசத்தி வரும் கீப்பர் ஆன கேஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டார். ஏனெனில் சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோர்கள் இந்திய ஏ அணிக்காக நியூஸிலாந்து சென்று விளையாடி வருவதால் பரத் அணியில் இடம்பிடித்துள்ளார்.

bharath

ஏற்கனவே இதற்கு முன்னதாக டெஸ்ட் தொடரின் போது சஹா காயமடைந்த போதும் அவர் அணியில் இடம் பெற்றார். ஆனால் போட்டிகளில் பங்கேற்கவில்லை அதே போன்று தற்போது ஒருநாள் தொடரிலும் இடம்பிடித்துள்ள இவர் இந்த தொடரிலும் விளையாட வாய்ப்பில்லை ஏனெனில் இறுதி போட்டியான இன்றும் பண்ட் இல்லையென்றால் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை தொடர்வார் என்பதால் பரத்திற்கு வாய்ப்பு கிடைக்காது. இருப்பினும் பேக்கப் விக்கெட் கீப்பராக அவர் இந்திய அணியில் இணைந்து இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement