24 வீரர்கள் மட்டுமில்லாது இன்னொரு வீரரை அணியில் இணைத்த பி.சி.சி.ஐ – யார் அது தெரியுமா ?

Ind-lose

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய டெஸ்ட் அணி, கடந்த 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 20 முன்னனி வீரர்களுடன், 4 பேக்கப் வீரர்களும் இடம்பிடித்திருந்தனர். மொத்தம் 24 வீரர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ரிஷப் பன்ட் மற்றும் விருத்திமான் சாஹா ஆகிய இரு விக்கட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம்பிடித்திருந்த வேளையில் தற்போது, மூன்றாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மற்றொரு வீரரையும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்திருக்கிறது பிசிசிஐ.

saha 2

ஐபிஎல் தொடரின்போது கொரானா தொற்று உறுதியான வீரர்களில், விருத்திமான் சாஹாவும் ஒருவர். கொரானா தொற்றினால் சாஹா பாதிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்து செல்வதற்கு முன் அவர் உடல் நலம் தேறி வந்தால்தான் இந்திய அணியில் இடம் உண்டு என்ற அடிப்படையில், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் அவர் கொரானா தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி அவருடைய வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். மேலும் இன்னும் சில தினங்களில் மும்பையில் இந்திய அணியுடன் பயோபுளில் இணைவார் என்று எதிர்பார்கப்படுகிறது.

- Advertisement -

இப்படி கொரானாவிலிருந்து அவர் குணமாகி மீண்டு வந்திருக்கும் நிலையில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே எஸ் பரத்தையும் இணைத்துள்ளது பிசிசிஐ. இதைப் பற்றி கூறிய இந்திய தேர்வுக் குழு, விருத்திமான் சாஹா கொரனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலும், அவர் இங்கிலாந்து தொடரின்போது நல்ல உடல் நிலையில் இருப்பாரா என்பது தெரியாது.

மேலும் விக்கெட் கீப்பிங் என்பது கிரிக்கெட்டில் ஒரு மிக முக்கியமான பொறுப்பு என்பதால் மூன்று மாதங்கள் என்ற இந்த பெரிய சுற்றுப் பயணத்தில் எங்களுக்கு இன்னொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிச்சயமக தேவை. எனவே தான் நாங்கள் கே எஸ் பரத்தையும் அணியில் இணைத்துள்ளோம் என்று கூறியிருக்கிறது.

- Advertisement -

KS-bharath

தற்போது இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே எஸ் பரத், இதற்கு முன்னரே சில தொடர்களில் இந்திய அணியில் பேக்கப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் முதல் தர டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 போட்டிகளில் விளையாடி 4823 ரன்கள் அடித்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பிங்கில் 270 கேட்சுகளை பிடித்துள்ள அவர், 31 ஸ்டம்பிங்கையும் செய்துள்ளார்.

Advertisement