2019- உலகக்கோப்பை தொடரில் ஆடுவதே எனது இலக்கு.! இந்திய ஆல்ரவுண்டர் நெகிழ்ச்சி.!

இந்திய அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா. இவர் இந்திய அணியின் மூன்று வகை சேர்வதேச போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடிவருகிறார். ஆனால், அவருடைய அண்ணன் குருனால் பாண்டியாவுக்கு இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்வில்லை. ஹார்டிக் மற்றும் குருனாள் பாண்டியா ஆகிய இருவரும் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

krunal

ipl போட்டிகளில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வரும் குருனால் பாண்டியா இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: 2019ஆம் ஆண்டு உலககோப்பை அணியில் இடம் பெறுவதே என்னுடைய இலக்கு. அதை நோக்கி நான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறேன். மேலும் அதற்காக, கடும் பயிற்சிகளை செய்து வருகிறார்.

விரைவில், இந்திய அணியில் நான் களமிறங்குவேன் என்ற நம்பிக்கை என்னிடம் நிறைய உள்ளது. இந்திய அணிக்காக விளையாடுவதே எனது சிறு வயது கனவு. 2019 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு முன்னதாக என்னுடைய திறமையை நிரூபித்து இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன். என்று, குருனால் பாண்டியா பேட்டியில் கூறியுள்ளார்.

krunal 2

நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில், இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்பட்டால் அது இங்கிலாந்தில் நடைபெறும் உலககோப்பைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். இந்திய அணியில் பேட்ஸ்மான்களுக்கு பஞ்சமில்லை, எனவே இவர் பந்து வீச்சில் கவனம் செலுத்தினாலே இந்திய அணியில் இடம்பிடிக்கலாம்.