கவர்மென்ட் வேலை ஒருபக்கம். கிரிக்கெட் ஒருபக்கம். சோதனையில் இருந்து சாதனையாக மாறிய – இந்திய வீரரின் கதை

Krunal
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

இதனால் இந்திய வீரர்கள் தற்போது தங்கள்து ஓய்வு நேரத்தை தங்களது வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அதுமட்டுமின்றி தங்களது வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியா தன் வாழ்வில் நடந்த சுவாரசியமான நிகழ்வினை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லை என்ற குறை எப்போதுமே இருந்து வந்தது. இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ்விற்கு பிறகு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு அமையவில்லை என்பது பெரும் பின்னடைவாக இருந்தது. அந்த வரிசையில் அணியில் இடம்பிடித்து தற்போது நட்சத்திர வீரராக வலம் வருபவர் ஹர்திக் பாண்டியா அவரது அதிரடி மற்றும் அவருடைய திறமை குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.

Krunal

இந்நிலையில் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா சுழற்பந்து வீச்சாளராக இந்திய டி20 அணியில் விளையாடி வருகிறார். அவர்கள் இருவருமே இந்திய அணிக்கு விளையாடும் முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடினார்கள். ஹார்டிக் பண்டியா இந்திய அணியில் இடம் பிடித்தது போன்று எளிதாக க்ருனால் பாண்டியா அணியில் நுழையவில்லை. உள்ளூர் போட்டிகள் மற்றும் மாநில போட்டிகள், சையது முஷ்டாக் அலி டிராபி என பல்வேறு கட்டங்களிலும் தன்னை நிரூபித்து இந்திய அணியில் நுழைந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றினை அவர் கூறுகையில் : நான் பரோடா அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் சோதனை போட்டி நடைபெற இருந்தது. அந்த போட்டிக்கு முன்பாக எனக்கு அரசு வேலையான ஸ்பீட்போஸ்ட் பிரிவில் வேலைக்கு எடுத்தார்கள். மேலும் எனக்கான நேர்முகத்தேர்வு கடிதமும் வந்தது. என் தந்தை இது நல்ல வாய்ப்பு என்றும் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்பதனால் நீ இந்த வேலைக்காக முயற்சி செய் என்று கூறினார்.

krunal

ஆனால் அதே வேளையில் எனக்கு இருந்த பரோடா அணிக்கான சோதனை போட்டியில் நான் பங்கேற்று சையது முஷ்டாக் அழி டிராபி யில் விளையாட தேர்வு செய்யப்பட்டேன். மேலும் அப்போது நான் அந்த அரசாங்க வேலைக்கான கடிதத்தை கிழித்துவிட்டு இந்திய வீரர் ஆக வேண்டும் என்ற நினைப்போடு கடுமையாக இரண்டு மூன்று ஆண்டுகள் உழைத்தேன். அதன் பிறகு என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. பல்வேறு சோதனைகளை தாண்டி நாங்கள் இன்று ஒரு சாதனையாளராக இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement