யுவ்ராஜ் சிங் மற்றும் பொல்லார்டு செய்த சாதனையை நான் செய்யணும் – க்ருனால் பாண்டியா ஆசை

Krunal
- Advertisement -

இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான க்ருனால் பாண்டியா கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 19 t20 போட்டிகள் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2016 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 80 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹார்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரது ஜோடி மும்பை அணிக்காக பெரிய பலமாக பார்க்கப்பட்டு வருகிறது.

krunal

- Advertisement -

இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் க்ருனால் பாண்டியா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் படைக்க விரும்பும் ஒரு ஆசை குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு க்ருனால் பாண்டியா பதிலளிக்கையில் :

நான் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்-ஐ அடிக்க வேண்டும் இது என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. நிச்சயம் அதை செய்ய எனக்கு ஆசை என்று தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை சில வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Krunal-2

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இந்த சாதனையை படைத்துள்ளார். அதே போன்று ஒரு நாள் போட்டிகளில் சவுத்ஆப்பிரிக்கா வீரர் கிப்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் பொல்லார்டு 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளார். அது தவிர அமெரிக்க வீரர் ஒருவரும், முதல்தர போட்டிகளில் ரவி சாஸ்திரியும் இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement