
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி இன்று கயானா நகரில் நடக்க உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சு துறையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எனது செயல்பாடும் இந்த தொடரில் சிறப்பாக உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் உடனடியாக விக்கட்டுகளை எடுப்பதால் மிடில் ஓவர்களில் நாங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றுகிறோம். இதனால் எங்களது பந்து வீச்சு சற்று எளிதாக இருக்கிறது.
இதனை போன்று இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தால் எந்த ஒரு அணியையும் எளிதாக இந்திய அணியால் வீழ்த்த முடியும். இதேபோன்று இந்திய அணி தொடர்ந்து செயல்படும் எனில் வரும் உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.