இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் இந்த விடயத்தில் தோனியை அடித்துக்கொள்ள யாருமில்லை – குருனால் பாண்டியா

Krunal
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

Kohli

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு தேர்வான குருனால் பாண்டியா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில அவர் கூறியதாவது :

தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் அவரைப் போன்ற பினிஷரை இதுவரை நான் பார்த்ததில்லை. மேலும் போட்டியை அவர் பொறுமையாக கையாளும் விதம் மேலும் இக்கட்டான சூழலில் அவருடைய கணிப்பு மற்றும் ஆட்டத்தின் நிலையை அறிந்து அந்தச் சூழலையும் கணித்து விளையாடும் அவரது திறமையும் நிச்சயம் அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

Dhoni 1

தோனியின் சாதனை அளப்பரியது. அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் நிறைய உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் சிறப்பாக விளையாடும். இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப் படுத்துவோம் என்று குருனால் பாண்டியா கூறினார்.

Advertisement