அறிமுக போட்டியிலே சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தலான சாதனையை படைத்த க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

Krunal

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டு புதுமுக வீரர்களுக்கு அறிமுக வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒருவர் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியாவின் அண்ணனான க்ருனால் பாண்டியா. உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் விளையாட தேர்வாகி இருந்தார்.

krishna 1

அப்படி இந்த போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வாய்ப்பை பெற்ற க்ருனால் பாண்டியா இன்றைய போட்டியின் போது 5 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ஏழாவது வீரராக களம் இறங்கினார். அப்படி களமிறங்கிய க்ருனால் பாண்டியா துவக்கத்தில் இருந்தே அடித்து விளையாடினார். இறுதிவரை பேட்டிங் செய்த அவர் 31 பந்துகளை சந்தித்து 2 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என 58 ரன்கள் குவித்து அசத்தினார்.

தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்த இவர் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இன்றைய போட்டியில் அவர் 26 பந்துகளில் அரைசதம் கடந்த க்ருனால் பாண்டியா இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Krunal 1

இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் செய்ய வந்த க்ருனால் பாண்டியா ராகுலுடன் சேர்ந்து இறுதி நேரத்தில் காட்டிய அதிரடி காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 317 ரன்களை குவித்தது. அதிலும் இறுதி பத்து ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் குவித்த இந்த பெரிய ரன் குவிப்பு முக்கிய காரணமாக க்ருனால் பாண்டியா விளங்கினார்.

- Advertisement -

Krunal 2

இன்றைய போட்டியின் துவக்கத்தில் தனது தம்பியான ஹர்டிக் பாண்டியாவிடமிருந்து ஒருநாள் அறிமுக தொப்பியை பெற்ற அவர் கண் கலங்கியபடி இறந்த தனது தந்தையின் நினைவாக வானத்தை நோக்கி அந்த தொப்பியை தூக்கி காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.