INDvsENG ODI : இந்திய அணி முதலில் பேட்டிங். இன்று 2 புதிய வீரர்கள் அறிமுகம் – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முடிவைடைந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சற்று முன்னர் தொடங்கிய நிலையில் டாஸ் போடப்பட்ட பிறகு டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

krishna 1

- Advertisement -

அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது உள்ளதால் பெரும் நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த போட்டியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்காக யார் யார் விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் டி20 தொடரை போன்றே ஒருநாள் தொடரிலும் தற்போது முதல் போட்டியிலேயே இரண்டு புது வீரர்களை அறிமுக வீரர்களாக விராட் கோலி விளையாட வைத்துள்ளார்.

ஏற்கனவே டி20 போட்டியில் இந்திய அணிக்காக இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அறிமுகமான நிலையில் தற்போது இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான க்ருனால் பாண்டியாவும் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவையும் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக கோலி விளையாட வைத்துள்ளார்.

krunal

மேலும் இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோரும் மூன்றாவது வீரராக விராட் கோலியும், நான்காவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கின்றனர். ஐந்தாவது வீரராக கே எல் ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணிகளை செய்யவுள்ளார். இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் நிச்சயம் பலமானது என்றே கூறலாம்.

krishna

அதுமட்டுமின்றி ஆல்-ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் விளையாடுகின்றனர். பவுலிங்கில் ஷர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement