முதல் போட்டியிலேயே உலகசாதனை நிகழ்த்திய க்ருனால் பாண்டியா பிரசித் கிருஷ்ணா ஜோடி – விவரம் இதோ

Krishna
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் க்ருனால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இருவருமே தங்களது முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

krishna 1

- Advertisement -

30 வயதான க்ருனால் பாண்டியா ஏற்கனவே இந்திய அணியின் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் கொண்டவர். ஆனால் தற்போதுதான் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பினை பெற்றுள்ளார். முதல் போட்டியில் ஏழாவது வீரராக களம் இறங்கியவர் 26 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் 31 பந்துகளை சந்தித்த அவர் 58 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 25 வயதான பிரசித் கிருஷ்ணா முதல் ஒருநாள் போட்டியில் 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுக போட்டியிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Krunal

இதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா தனது அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பிரசித் கிருஷ்ணா தான் முதல் முறையாக அறிமுகப் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்படி அறிமுக போட்டியிலேயே உலக சாதனையை நிகழ்த்திய இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

prasidh-krishna

மேலும் அதே போன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் என அனைவரும் இந்த தொடரில் பிரகாசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement