இந்த இலங்கை சீரியஸ்ல என்னோட திறமை என்னனு நீங்க பாக்கதான போறீங்க – இளம்வீரர் அதிரடி

Gowtham-2
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய தொடர்களுக்கான இந்திய அணியை நேற்று முன் அறிவித்திருந்தது பிசிசிஐ. இந்த அணியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா கௌதம் 6வது பதுமுக வீரராக இடம் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவர் 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இலங்கை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து மேலும் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கௌதம். அவரிடம் ஒரு தனியார் விளைட்டு இணையதளம் தற்போது பேட்டியெடுத்திருக்கிறது. அந்த பேட்டியில் பேசிய அவர்,

- Advertisement -

பல ஆண்டுகளாக கனவாக மட்டுமே இருந்த ஒன்று தற்போது நனவாகியுள்ளது. ஆனால் அதற்காக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். கர்நாடக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணயிலும் அவருக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பேட்டியில் ராகுல் ட்ராவிட்டின் பயிற்சியின் கீழ் விளையாடுவதைப் பற்றி பேசிய அவர், ஏற்கனவே நான் இந்திய A அணியில் ராகுல் ட்ராவிட் பயிற்சியின் கீழ் விளையாடி இருக்கிறேன். எனவே ஒரு பயிற்சியாளராக அவர் வீரர்களிடம் இருந்து எதை எதிர்பார்ப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் பயிற்சியின் கீழ் விளையாடியது இந்த சுற்றுப் பயணத்திற்கு எனக்கு அதிகமாக உதவும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

gowtham

சமீபகாலமாகவே கிருஷ்ணப்பா கௌதம் கேரம் பால் வீசுவதில் மிகத் திறமையான வீரராக உருவெடுத்துள்ளார். இதனை அஷ்வினைப் பார்த்து கற்றுக் கொண்டீர்களா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு மறுத்து பேசிய அவர், ஒவ்வொரு வீரரும் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் திறமைகளை அதிகமாக வளர்த்துக் கொள்வது அவசியாமான ஒன்றாக இருக்கிறது. அதன்படி நான் என்னுடைய திறமைகளை நானாகத்தான் வளர்த்துக் கொண்டேன். அஷ்வின் ஒரு சிறந்த வீரர். அவருடைய விளையாட்டையும் அணுகுமுறையையும் நான் நேசிக்கிறேன்.

gowtham 1

ஆனால் கேரம் பால் வீசும் திறனை நான் எனது சொந்த முயற்சியில் இருந்தே வளர்த்து கொண்டேன் என்று அந்த கேள்விக்கு அவர் பதலளித்துள்ளார். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இடம்பிடித்து இருக்கும் கிருஷ்ணப்பா கௌதம், இதுவரை 42 முதல் தர போட்டிகளில் விளையாடி 1045 ரன்கள் அடித்திருக்கிறார். மேலும் 166 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement