- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரை ஆல் ரவுண்டர்ன்னு எப்படி சொல்றிங்க? அவருக்கு பதில் சர்பராஸ் ஆடலாமே.. ஸ்ரீகாந்த் விமர்சனம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோற்ற இந்தியா கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியிலும் திண்டாடி வருகிறது. அப்போட்டியில் இந்தியா 500க்கும் மேற்பட்ட இலக்கை சேசிங் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்தியா 2 – 0 (2) என தோல்வியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுகள் மிகவும் தவறாக இருப்பதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் மற்றும் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் சதத்தை அடித்து விட்டார் என்பதற்காக நித்திஷ் ரெட்டியை இந்திய சூழ்நிலைகளில் ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுப்பது தவறான முடிவு என்று அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

தவறான தேர்வுகள்:

மேலும் டக் அவுட்டான விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேலுக்கு பதிலாக ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனான சர்பராஸ் கானை விளையாட வைக்கலாமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “நித்திஷ் ரெட்டியை ஆல் ரவுண்டர் என்று சொல்வது யார்? யாராவது அவருடைய பந்து வீச்சை பார்த்து விட்டு அவரை ஆல் ரவுண்டர் என்று சொல்ல முடியுமா? மெல்போர்ன் மைதானத்தில் சதத்தை அடித்த பின் அவர் என்ன செய்தார்?”

“ஒரு வெளிச்சம் கோடை காலத்தை உருவாக்காது என்று அனைவரும் சொல்வார்கள். ஒருவேளை நிதிஷ் ரெட்டி ஆல் ரவுண்டர் என்றால் நானும் சிறந்த ஆல் ரவுண்டர் தான். அவரை எப்படி நீங்கள் ஆல் ரவுண்டர் என்றழைப்பீர்கள்? அவரது பந்து வீச்சில் வேகம், நகர்வு ஒன்றை ஏதேனும் இருக்கிறதா? அவர் ஆபத்தான பேட்ஸ்மேனும் கிடையாது. எனவே ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்று மட்டுமே அழையுங்கள்.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

“இதற்கிடையே நித்திஷ் ரெட்டியை நீங்கள் ஒருநாள் அணியிலும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்? அவர் பாண்டியாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா? அப்படியானால் அக்சர் பட்டேல் ஏன் இல்லை? துருவ் ஜுரேல் ஆபத்தான பேட்ஸ்மேன் கிடையாது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடித்த அவரை நீங்கள் மிகைப்படுத்தியுள்ளார்கள்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு நடக்கும் இந்த ஏமாற்றம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது – சுப்ரமணியம் பத்ரிநாத் பேட்டி

“எங்களிடம் 8வது இடம் வரை பேட்ஸ்மேன் இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் 8வது இடம் வரை பேட்ஸ்மேன்களை வைத்துக் கொண்டு நீங்கள் 201 மட்டுமே அடித்துள்ளீர்கள். சர்பராஸ் கானுக்கு ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அவருக்கு இந்தியாவில் வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -