- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பேசாம இந்தியாவை விட்டுட்டு அந்த நாட்டுக்கு போய் ஆடுங்க.. கம்பீர் தப்பை ஒத்துக்கனும்.. ஸ்ரீகாந்த் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றது. 2012 முதல் சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் உலக சாதனை படைத்த இந்தியா கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் மீண்டும் தோற்றுள்ள இந்தியா சொந்த மண்ணிலேயே திணறுவது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியினர் இந்தியாவில் எப்படி விளையாட வேண்டும் என்பதை மறந்து விட்டது போல் தெரிகிறது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வேதனையுடன் விமர்சித்துள்ளார். அதனால் 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்துக்குச் சென்று விளையாடிவிட்டு எஞ்சிய நேரங்களில் அங்கே வழக்கம் போல தெருவை சுற்றிப் பாருங்கள் என்றும் அவர் வேதனையுடன் இந்திய அணியை விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு போங்க:

மேலும் சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக் கோப்பையை வென்று கொடுத்ததை மறந்து விட்டு மக்கள் தம்மை விமர்சிப்பதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். அதற்கு தோல்விக்கு காரணமான தவறான தேர்வுகள் மற்றும் மாற்றங்களை கம்பீர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாடும் நீங்கள் ஸ்பின் பிட்ச்களில் சிக்கிக் கொள்கிறீர்கள். இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? கொல்கத்தாவில் சுழலுக்கு சாதகமான பிட்ச் தான் வேண்டுமென்று விரும்பியதாக கம்பீர் சொன்னார். பரவாயில்லை. ஆனால் கௌகாத்தி பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாகவே இருந்தது. அதில் எந்த குறையும் இல்லை”

- Advertisement -

ஸ்ரீகாந்த் விமர்சனம்:

“அங்கே சைமன் ஹார்மர் அழகாக பந்து வீசினார். இந்திய அணி நன்றாக விளையாடுவதற்கு என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது. அவர்கள் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் இங்கிலாந்தில் விளையாட வேண்டும். அங்கே உங்களுக்கு நல்ல ரசிகர்கள் கூட்டம் கிடைக்கும். அங்கே விளையாடிவிட்டு விடுமுறை நாட்களை கழிக்கலாம். நீங்கள் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் அசத்தியதாக சொல்கிறீர்கள்”

இதையும் படிங்க: டீம் புதுசுன்னு சொல்லி ஒளியாதீங்க கம்பீர்.. தோல்விக்கு உங்களோட அந்த ஆசையே காரணம்.. பிரசாத் விளாசல்

“எனவே அங்கேயே மீண்டும் விளையாடுங்கள். இந்தியாவில் விளையாடாதீர்கள். நீங்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு “ஆம் தவறு செய்தோம்” என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். சிஸ்டத்தில் குறை இருந்தால் வெளிப்படையாக சொல்லுங்கள். ஆனால் சொந்த மண்ணில் ஒவ்வொரு தொடரிலும் தோற்கும் நீங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அதே போல தோல்விக்கு வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள வீரர்களால் மணிக்கணக்கில் பேட்டிங் செய்ய முடியவில்லை. உங்களால் வெல்லத்தான் முடியவில்லை. ஆனால் போட்டியை போராடி ட்ரா கூடவா செய்ய முடியாது?” என்று கூறினார்.

- Advertisement -