விராட், ரோஹித் இல்லாம இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. இப்போவே அந்த டீம்ல பெயரை எழுதுங்க.. ஸ்ரீகாந்த்

Kris Srikkanth
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி சதமடித்து 135, ரோஹித் சர்மா 57, கேப்டன் ராகுல் 60, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா சிறப்பாக போராடியும் 332 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள இந்தியா டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்காக தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது.

- Advertisement -

விராட், ரோஹித் இல்லாமல்:

முன்னதாக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். அடுத்ததாக 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமாகும். ஆனால் அதற்கு முன் வயதைக் காரணம் காட்டி அவர்களை தேர்வுக்குழுவும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கழற்றி விட முயற்சிக்கிறார்கள்.

அதனாலேயே ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பொறுப்பைப் பறித்த தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்கு இடம் கொடுக்காத அவர்கள் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிட்னி போட்டியில் அசத்தியதைப் போல இப்போட்டியிலும் அசத்தியுள்ளார்கள். இந்நிலையில் விராட், ரோஹித் இல்லாமல் இந்தியாவால் 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா வெல்ல முடியாது:

எனவே உலகக் கோப்பை இந்திய அணியில் இப்போதே அவர்கள் பெயர்களை எழுதலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் ரோஹித், வேற லெவலில் விளையாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் 2027 உலகக்கோப்பை திட்டங்கள் வேலையாகாது. உங்களுக்கு ஒருபுறம் ரோஹித்தும் மறுபுறம் கோலியும் தேவை என்பதில் கேள்வியே இருக்கக்கூடாது”

“அவர்கள் 20 ஓவர்கள் விளையாடினால் எதிரணி முடிந்து விடுவார்கள். அதுவே இன்று நடந்தது. அவர்கள் கிட்டத்தட்ட எதிரணியை பேட்டிங்கில் தோற்கடித்தனர். ஆம் தென்னாப்பிரிக்கா போராடியது. ஆனால் விராட், ரோஹித் பார்ட்னர்ஷிப் தென்னாப்பிரிக்காவை முடித்தது. அது ரன்களை பற்றியது மட்டும் கிடையாது”

இதையும் படிங்க: இப்போவாச்சும் கம்பீர் கணக்கு புரியுதா.. ராணா மட்டும் இல்லனா இந்தியா தோத்துருக்கும்.. கோட்டக் பேட்டி

“ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர்கள் தங்களது ஃபிட்னஸில் கடினமாக உழைத்துள்ளனர். ஒரு ஃபார்மட்டில் மட்டும் விளையாடும் போது உங்களது மனதை நிர்வகிப்பது எளிதல்ல. என்னைப் பொறுத்த வரை அவர்கள் உலகக்கோப்பையில் 1, 3வது இடத்தைப் பிடித்து விட்டார்கள். நம்மால் அவர்கள் இல்லாமல் வெல்ல முடியாது” என்று கூறினார்.

Advertisement