கொம்பன்களுடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இத்தனை ஹிட்டர்களா ? – கோப்பை அவங்களுக்குத்தானா ?

Kkr
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஒரு திருவிழாவைப் போல் வரவேற்க தயாராகி உள்ளனர். ஒவ்வொரு அணியும் தங்கள் அணி வீரர்களை வைத்து தற்போது பயிற்சி செய்து வருகின்றனர். இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என ஒவ்வொரு அணியும் கடந்த ஒரு வருடமாக திட்டம் தீட்டி தற்போது அதனை செயல்படுத்த உள்ளனர்.

Kkr

- Advertisement -

அந்த வகையில் இரண்டு முறையை கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று மூன்றாவது கோப்பையை தங்கள் அணிக்கு சேர்க்க வலுவாக திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக பந்துவீச்சை பலப்படுத்த ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்சை கிட்டத்தட்ட 15.5 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

அவரை தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனை 5.25 கோடிக்கும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 4 கோடிக்கும் அதிரடி வீரர் உட்பட 9 வீரர்களை கொல்கத்தா அணி இந்த வருட ஏலத்தில் எடுத்துள்ளது.

morgan

இவர்களை தவிர தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சுப்மன் கில், லக்கி ஃபர்கியூசன், நிதிஷ் ரானா, சந்தீப் வாரியர், ஹாரி குர்னே, பரிசுத் கிருஷ்ணா ஆகிய 14 வீரர்களையும் ஏலத்திற்கு முன்பே தக்கவைத்துக்கொண்டது.

- Advertisement -

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 23 வீரர்கள் உள்ளனர். இந்த 23 வீரர்களில் 11 சிறந்த வீரர்களை களமிறக்க வேண்டும் .குறிப்பாக இயான் மார்கன் வந்துவிட்டதால் கேப்டன்சிப்பில் மாற்றம் இருக்கலாம். ஏனெனில் தினேஷ் கார்த்திக் அவ்வளவு சிறப்பாக அணியை வழி நடத்துகிறாரா என்பது கேள்விக்குறியே?

Russell

ஆண்ட்ரிவ் ரஸல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், நிதிஷ் ரானா, சுப்மான் கில், சுனில் நரைன், பட் கம்மின்ஸ், இயான் மார்கன், லக்கி ஃபர்கியூசன், பரிசத் கிருஷ்ணா ஆகியோர் கண்டிப்பாக இவர்கள் 11 பேர் இறங்க வாய்ப்புள்ளது. அணி மிகவும் வலுவாக உள்ளது இந்த வீரர்கள் சரியாக செயல்படும் பட்சத்தில் எந்த ஒரு பலம் வாய்ந்த அணியையும் வீழ்த்தி விடக்கூடும்.

Advertisement