இந்தியா – தெ.ஆ முதல் டெஸ்ட் கொல்கத்தா பிட்ச் எப்படி? சுழலுக்கு சாதகமாக இருக்குமா? க்யூரேட்டேர் பேட்டி

Kolkata Test
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அத்தொடரில் உலக டெஸ்ட் சாம்பியனாக திகழும் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சொந்த மண்ணில் சவாலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சவாலை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி சமாளித்து வெற்றி பெறுவதற்கு தயாராகி வருகிறது. முன்னதாக இந்தியாவில் பெரும்பாலான மைதானங்களில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பது வழக்கமாகும். அதனால் பெரும்பாலான வெளிநாட்டு அணிகளும் 3 ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுப்பது வழக்கமாகும்.

- Advertisement -

கொல்கத்தா பிட்ச் எப்படி:

அதே போல இம்முறை தென்னாப்பிரிக்கா கேசவ் மகாராஜ், சேனுரான் முத்துசாமி, ஹார்மர் ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்க வந்துள்ளது. அதை சமாளிக்க இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானத்தின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்குமா? என்ற கேள்வி காணப்படுகிறது.

அதற்கு கொல்கத்தா மைதானத்தின் காப்பாளர் சுஜன் முக்கர்ஜி பதிலளித்துள்ளார். இம்முறை கொல்கத்தாவில் 3வது நாளிலிருந்து பந்து சுழலும் என்று அவர் தெரிவித்துள்ளார். பிட்ச்சில் லேசான புற்கள் விடப்பட்டுள்ளதால் முதல் 2 நாட்களில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு உதவி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சுஜன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

க்யூரேட்டர் பதில்:

“பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பிட்ச்சை பார்த்து விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அது 3வது நாளிலிருந்து ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமையலாம். அது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் ஆகிய இருவருக்குமே சாதகமாக இருக்கக்கூடிய பொழுதுபோக்கான ஆடுகளமாக இருக்கும். ஸ்பின்னர்களுக்கு ஆரம்பத்திலேயே கூட உதவி கிடைக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வாய்ப்பே இல்ல.. காரணத்தை கூறிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

கடைசியாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதைத் தொடர்ந்து 6 வருடங்கள் கழித்து தற்போது கொல்கத்தாவில் இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. அதனால் அங்கே முதல் 3 நாட்களுக்கான டிக்கெட் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதாக பெங்கால் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement