ரீடிவீட்டில் இந்திய அளவில் சாதனை. அதும் கோலி இந்த வீரருக்காக போட்ட ட்வீட் தானாம் – விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

2019 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் எந்த ட்வீட் இந்திய அளவில் அளவிற்கு ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது போன்ற பட்டியலை இந்திய ட்விட்டர் நிறுவனம் இந்திய அளவில் வெளியிட்டுள்ளது.

dhoni

- Advertisement -

அதன்படி ட்விட்டரில் அதிக அளவில் பேசப்பட்ட விளையாட்டு வீரர்களின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், தோனி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். வீராங்கனைகளில் பொருத்தவரையில் பி.வி.சிந்து முதலிடத்திலும், ஹிமா தாஸ் மற்றும் சானியா மிர்சா அதற்கடுத்த இடங்களையும் பிடித்தனர்.

அதேபோல விளையாட்டு வீரர் செய்த டுவிட் ஒன்று ரீட்வீட் அதிகம் செய்யப்பட்ட பதிவாக தோனி காக கோலி போட்ட பிறந்தநாள் ட்வீட் பதிவாகியுள்ளது. தோனியின் பிறந்தநாளன்று கோலி கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி அவருக்கு வாழ்த்துக் கூறிய ட்வீட் தான் இந்தியாவில் அதிகமாக ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரத்து 500 பேர் அந்த டிவீட்டிற்கு ரீடிவீட் செய்துள்ளார்கள்.

kohli

விராட் கோலி அந்த பதிவில் : பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி வெகு சிலர் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதை உண்மை அர்த்தங்களை புரிந்து கொள்வார்கள். அப்படியான ஒரு நண்பருடன் நான் பல வருடங்களாக நட்புடன் இருந்துள்ளேன். எங்கள் எல்லோருக்கும் நீங்கள் தான் பெரிய அண்ணன் நான் ஏற்கனவே சொன்னதுபோல நீங்கள் தான் எப்போதும் எனது கேப்டன் என்று கோலி ட்வீட் செய்திருந்தது இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement