கோலி இந்திய மண்ணில் படைக்காத சாதனை இது மட்டும்தான். இந்த முறை அதை நிகழ்த்துவார் – விவரம் இதோ

virath-kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனை ஒன்றை நிகழ்த்த உள்ளார். ஏற்கனவே பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் கோலி இந்த தொடரில் ஒரு புதிய வித்தியாசமான சாதனைக்கு ஒன்றுக்கு குறி வைத்துள்ளார்.

அது யாதெனில் இதுவரை இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அவர் சதம் விளாசியுள்ளார். இன்னும் தென் ஆப்பிரிக்க அணியிடம் மட்டுமே அவர் இந்திய மண்ணில் டெஸ்ட் சதத்தை அடிக்கவில்லை. இந்த தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடக்க உள்ளதால் நிச்சயம் இந்த சாதனையை அவர் முதல் போட்டியிலேயே கூட படைக்க வாய்ப்பு உள்ளது என்று கோலியின் ரசிகர்கள் இந்த சாதனையை குறிப்பிட்டு இந்த தொடரில் கோலி நிச்சயம் இதை நிகழ்த்துவார் என்று சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

kohli

மேலும் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக தற்போது திகழ்ந்து வரும் கோலி மிக விரைவாக ரன்களை குவித்து வருகிறார். அவரது ஆட்டத்தில் ஒவ்வொருநாளும் முன்னேற்றம் இருக்கிறதே தவிர ஒருபோதும் அவர் சொதப்பலாக விளையாடுவதில்லை. இந்த தொடரில் அவர் ஏகப்பட்ட சாதனைகளை படைத்தார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்திய மண்ணில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 95 ரன்கள் எடுத்ததே கோலியின் அதிகபட்ச ரன்கள் ஆகும்.

Advertisement